இக்குறிப்புகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் டயர் அளவை ஒன்றுக்கு இரண்டு தடவை டயர் பக்கச் சுவரில் அச்சடிக்கப்பட்டிருக்கும் அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Disclaimer- CEAT பக்ஞ்சர் சேஃப் பைக் டயர்களை தற்போது ஒரு சில பைக் மாடல்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்திருக்கிறோம். வெகு விரைவிலேயே அனைத்து வாகனங்களுக்கும் இதைக் கிடைக்கச் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்
காற்று இறங்கி தட்டையாகிவிடும்
அதிக விலைநீடித்து உழைக்கும் செயல்திறம்
லிக்விட் சீலன்ட்
பசுமை
சுற்றுச்சூழலுடன் நட்புறவுDisclaimer: *தொழில்முறையாளர்களின் திறமைகள் இங்கே படம் பிடிக்கப்பட்டுள்ளன அல்லது தொழில்முறை பயிற்சியாளர்கள் மேற்பார்வையில் இவை செய்யப்பட்டுள்ளன. இந்த சாகசங்களை நீங்கள் செய்து பார்ப்பது அல்லது நடித்துக் காட்டுவது கூடாது. தரையில் பதியும் டயர் பகுதியில் ஆணி குத்தி பழுதாகும் 2.5 மிமீ வரை விட்டமுள்ள துளைகள் மட்டுமே தானாகவே மூடிக்கொள்ளும். கூடுதல் விவரங்களுக்கு www.ceat.com பார்க்கவும்.
டியூட் இல்லாத டயர் உட்புறத்தில் சிறப்பு காப்புரிமையுள்ள சீலன்டுகள் பூசப்பட்டு CEAT பக்ஞ்சர் சேஃப் டயர்கள் உருவாக்கப்படுகின்றன
தரையில் பதியும் டயர் பகுதியில் உட்புறம் மட்டுமே சீலன்ட் பூசப்பட்டிருக்கும். ஆகையால், தரையில் பதியும் டயர் பாகத்தில் ஏற்படும் பக்ஞ்சர்கள் மட்டுமே சீல் ஆகும், டயர் பக்கச் சுவர், டயர் ஷோல்டர் ஆகிய பகுதிகளில் அல்ல.
தரையில் பதியும் டயர் பாகத்தில் ஆணிகளால் ஏற்படும் 2.5மிமீ விட்டம் வரையிலான துளைகளை மட்டும் சீலன்ட் சீல் செய்துவிடும்
ஆமாம் இவ்வாறு செய்யப்படும் பேக்கேஜ், டயர்களையும் சீலன்டையும் பாதுகாப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
CEAT பக்ஞ்சர் சேஃப் டயர்கள் டியூப்லெஸ் டயர்கள் என்பதால் அவற்றை டியூப்லெஸ் ரிம்களில் மட்டுமே பொருத்த முடியும்
இயலாது. CEAT பக்ஞ்சர் சேஃப் டயர்கள் டியூப்லெஸ் டயர்கள் என்பதால் அவற்றை டியூப்லெஸ் ரிம்களில் மட்டுமே பொருத்த முடியும்
தற்போது, ஒரு சில குறிப்பிட்ட பைக் மாடல்களுக்கு மட்டுமே இந்த வகை டயர்கள் கிடைக்கின்றன. உங்கள் பைக் மாடலுக்கும் இது கிடைக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள <link to find the tyre size mapping> இங்கே கிளிக் செய்யுங்கள்
தற்போது ஒரு சில குறிப்பிட்ட பைக் மாடல்களுக்கு மட்டுமே, 11 சைஸ் மற்றும் பேட்டர்ன்களில் கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்படிருப்பது போல் கிடைக்கின்றன
Puncture Safe Tyres Are Available In | ||
---|---|---|
Size | Front/Rear | Pattern |
2.75-18 | Front | Gripp F |
2.75-17 | Front | Gripp F |
80/100-18 | Front | Secura Zoom F |
2.75-18 | Rear | Milaze |
3.00-18 | Rear | Milaze |
3.00-17 | Rear | Milaze |
80/100-18 | Rear | Secura Zoom, Gripp X3 |
80/100-17 | Front | Zoom X3 F |
100/90-17 | Rear | Gripp X3 |
90/90-17 | Front | Zoom X3 F |
100/80-17 | Front | Zoom Plus F |
பணத்திற்கான மதிப்பு
நேரத்திற்கான மதிப்பு
வாழ்க்கைப் பாதுகாப்பு மதிப்பு
CEAT பக்ஞ்சர் சேஃப் டயர்களுடன் சிக்கலில்லாத பயணத்தை அனுபவித்து மகிழுங்கள்..
டயர் மற்றும் சீலன்டுக்கு சேதம் எதுவும் ஏற்படாத வகையில் பேக்கேஜிலிருந்து டயரை எடுக்க வேண்டும்.
டியூப்லெஸ் ரிம்மில் மட்டுமே டயரைப் பொருத்த வேண்டும். டியூப் டைப் ரிம்களில் இதைப் பொருத்தக் கூடாது
டயரைப் பொருத்தும் போது தண்ணீர் எதுவும் அதனுடன் சேரக்கூடாது என்பதை கவனிக்க வேண்டும் தண்ணீர் இருந்தால் அது சீலன்டை சேதப்படுத்திவிடும்.
டயரைப் பொருத்தும் போது சீலன்ட் ஜெல் சேதமடையாமல் கவனமாகப் பொருத்த வேண்டும்
டயர் மீது ஏறி நிற்கக் கூடாது, இது சீலன்ட் செயல்படும் விதத்தைப் பாதிக்கும்
டயர், ரிம் மற்றும் வால்வ் அசெம்ப்ளி ஆகியவற்றைப் பரிசோதித்து காற்று கசிவு இல்லாததை உறுதி செய்துகொள்ள வேண்டும், வாகனத்தில் பொருத்தும் முன்னர் தண்ணீரில் இதை அமிழ்த்தி பரிசோதிக்க வேண்டும்.
உங்கள் வாகன உற்பத்தியாளர் பரிந்துரைத்திருக்கும் காற்று அழுத்த அளவு சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்துக்கொள்ள வேண்டும்.
வாகனத்தில் ஓவர்லோட் ஏற்றக் கூடாது.
காற்று அழுத்தம் குறைவாக அல்லது டயர் தட்டையாக இருக்கும் நிலைமையில் வாகனத்தை ஒட்டக் கூடாது.
மாதத்தில் ஒரு தடவை டயர் காற்று அழுத்தத்தைப் பரிசோதித்து அழுத்தம் சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
வாரத்தில் ஒரு தடவை டயர்களைப் பரிசோதித்து ஏதேனும் ஆணி குத்தியிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்
ஆணியை பிடுங்கி எடுக்கும் போது ஒருவேளை சீலன்ட் கசிந்துவெளிப்பட்டால் மறுபடியும் ஆணியை அங்கேயே நுழைத்து ஒரு நிமிடம் கழித்து ஆணியை எடுக்க வேண்டும். பக்ஞ்சர் தானாகவே சீல் ஆகிவிடும்.
சரிவர கவனித்து பராமரிக்கும் போது உங்கள் CEAT டயர்கள் நீண்ட காலத்திற்கு உழைக்கும். ஏதேனும் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் போது எங்கள் சிறப்பு வாரன்ட் வரையறைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
a. உற்பத்தி சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கு வாரன்ட் காலவரை:*
i. டயர் உற்பத்தி / வாரன்டி பதிவு செய்துகொண்ட தேதியிலிருந்து 6 வருடங்கள் அல்லது டயர் தேய்ந்திருக்கும் அடையாளங்கள் (TWI) காணுதல், இதில் எது முதலில் நிகழ்கிறதோ அது வரையில், இதில் கிலோமீட்டர் ஓடியிருப்பது கணக்கில் வராது.
b. உற்பத்தி சாராத குறைபாடுகளுக்கு வாரன்டி காலவரை:*
i. டயர் உற்பத்தி / வாரன்டி பதிவு செய்துகொண்ட தேதியிலிருந்து 3 வருடங்கள் அல்லது டயர் தேய்ந்திருக்கும் அடையாளங்கள் காணுதல், இதில் எது முதலில் நிகழ்கிறதோ அது வரையில், இதில் கிலோமீட்டர் ஓடியிருப்பது கணக்கில் வராது.
(*கூடுதல் விவரங்களுக்கு, எங்கள் வலைதளம் www.ceat.com பக்கத்தைப் பார்க்கவும்)
உங்கள் விவரங்களை தெரிவியுங்கள், எங்கள் நிபுணர்கள் உங்களுடன் தொடர்பு கொள்வார்கள்
டீலரைத் தேர்ந்தெடுக்க உங்கள் பின்கோட் எண்ணை எழுதுங்கள்